Saturday, March 10, 2007

திருக்குறள்-4

"சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்"

எனக்கு தெரிந்து கரும்பு உவமையாக்க பட்ட ஒரே குறள். மன்மதன், கரும்பு போன்றவை காமத்துப்பாலில் பயன்படுத்த பட்டு உள்ளதா தெரியவில்லை. எல்லா தவர வகைகளையும் நாம் கொன்று தான் உண்ணுகிறோம். ஆக இந்த கொல்லுதல் பிழிதலை அர்த்தப்படுத்துவதாக கொள்ளலாம். அப்படியென்றால் திருக்குறள் காலத்திலே கரும்பை எதைக் கொண்டோ பிழிந்திருக்கிறார்கள். பிழிந்து என்ன செய்து இருப்பார்கள் சாரயம்? சக்கரை? சக்கரை செய்தார்களோ இல்லையோ கரும்பை பிழிவது என்ற அளவிலாவது தொழில்நுட்பம் தெரிந்து வைத்துள்ளனர். 2000 வருடம் முந்தியே கரும்பாலை வைத்திருந்தோமா? என்னளவில் இது ஆச்சரியமாக உள்ளது, மற்றொரு விசயம்: கரும்பை கடித்து தின்பது அன்றுதொட்டு அந்த அளவு பழக்கதில் இல்லை, இருந்திருந்தால் இந்த குறள் அர்த்தம் இழக்கிறது.

2 comments:

Unknown said...

one general comment abt ur blog.....Ur page background is making me feel like am working in mainframes...

Unknown said...

In those days karumbu wud have been used to get Vellam (Jaggery)...
வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும். வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

Now It is clear abt the example in that kural and ur dbt abt wat they were doing with karumbu in olden days....Surely karumbu was not used for making sarayam in those days..