Tuesday, June 23, 2009

என்றோ எழுதியவை-4

நடக்க விடாமல்
கால்களை அமுக்கி,
சில சமயம் வீடு வரையே
ஒட்டிக்கொண்டு வந்து விடுகின்றன,
என்றோ,
கண்களை துருத்தி,
கடைசி துளியோடு,
கழண்டு விழுந்து-மணலாக
மாறி போன பிரியம்.

என்றோ எழுதியவை-3

பாலையின் வெட்கை

இரவின் மடியில்,
என் இருப்பை
வினவி பொகின்றன
உன் இல்லாமை.

காதோர கடிகள்
தலை சிலிர்க்கையில்,
காற்றோடு கரைகிறது-
நள்ளிரவு கனவாய்.

வேண்டாத போது -வரும்
மரணத்தை விட கொடியது
வேண்டிய போது
வாராத மரணம்.

என்றோ எழுதியவை-2

சீட்டாட்டம்
ஒவ்வொரு சுற்றிலும்
வெவ்வேறு விரலில்,
வெவ்வேறு சீட்டுகளுடன் - சேர்வது
குலுக்கி போடப்பட்ட சீட்டுகள் மட்டுமல்ல...
கழித்துக் கட்டபடுவதும்,
முக்கிய புள்ளியாய் முளைப்பதும்,
பதுக்கபடுவதும்,
சீண்ட படாமலே போவதும்
சீட்டுகள் மட்டுமல்ல....
ஒட்டி நின்ற சீட்டுகள்
வேறு விரலுக்கு சென்றவுடன்
வெட்டபடுவதும் சீட்டாடத்திற்கு மட்டுமே
உரித்தானதல்ல...
ஆனால்,
அடுத்த ஆட்டம் அறிந்து கொள்வதும்,
ஆட தெரிந்தவனிடம் தஞ்சமடைவதும்
சீட்டுக்கு மட்டும் சாத்தியமில்லை.

என்றோ எழுதியவை-1

1. துளிர் தேடும் அவசரத்தில்
கிழியும் காற்றானாது
வீழும் இலையின் மரணம்.
-------------------------------------------------------------
2. விலகும் தறிகள்
இணைத்து போகின்றன
இழைகளை.
------------------------------------------------------------
3. கிணற்றிலேயே வாழ்ந்து விட
முடியுமென்றால்- வேறென்ன கவலை
கிணற்று தவளைக்கு?