"பாட்டி அப்பளம் சுட்டாள்"-சிறுகதை.
"பாட்டி வானலியில் எண்ணை ஊற்றினாள். அப்பளக் கட்டை எடுத்தாள்....." -நாவல்.
இந்த பகுப்பை ஆதரிக்கா விட்டாலும் எதிர்க்காதவன் நான். ஆனால், நாவல், சிறுகதை சார்ந்து என்னுள் இருந்த எண்ணங்களை தெளிவடைய செய்தது R.K. Narayan இன் Malgudi Days. இந்த சிறுகதை தொகுப்பு நான் இதற்குமுன் படித்த சிறுகதைகளில் ரசித்தவையையும் , அதற்கான காரணத்தையும் உணர்த்தியது.
நான் படித்தவற்றில் பெரும்பாலுமானவை நாவல்களே. பெரும்பாலும் நாவல் படிக்கும் வேகத்திற்கு சிறுகதை தொகுப்பு படிக்க முடிவதில்லை. ஒரு சிறுகதைக்கும் மற்றொன்றும்கிடையே போதுமான இடைவெளி தேவைபடுகிறது. தொடர்ந்து 3/4 சிறுகதை படித்தால் அடுத்த சிறுகதையை ரசிக்க முடியவில்லை. ஆனால் நாவலில் தொடர்ந்து பல அத்தியாயங்கள் படிக்க முடிகிறது. இது கூட நான் சிறுகதையை தவிர்க்க காரணமாக இருக்கலாம். மற்றொரு விசயம், வார பத்திரிக்கைகள் கவிதைக்கு பிறகு அதிகம் கொலை பன்னியது சிறுகதைகளைதான்.
சிறுகதைகள் பெரும்பாலும் பேசுவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைதான். பெரும்பாலும் அது சாதரண மனிதர்களின் வாழ்வில் நிகழ்கின்ற சற்றே வித்தியாசமன நிகழ்வுகளை பற்றியே பேசுகிறது. ஆனால் நாவலுக்கோ சற்றே அசாதராணமான நிகழ்வுகளும், நிகழ்வுகளைவிட ஏன் அது நிகழ்கிறது என்பது சார்ந்த நம்பகதன்மையை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. சிறுகதை சாதரண மனிதர்களை சுற்றி நிகழ்வதால் charachter establishment/ consistencyக்கு ரொம்ப மெனக்கெடவேண்டியது இல்லை. அப்படி chrachter establishment செய்ய முயற்சிக்கிற சிறுகதைகள் ஏதோ அரைகுறையாக முடிந்ததாகவே தோன்றுகிறது. நாவலுக்கு ஒரு முழுமையான முடிவு அவசியம் ஆகிறது. ஆனால் ஒரு சிறுகதையின் பெரும்பகுதி வாசிப்பவரின் கற்பனையில் இருக்கிறது. அந்த கதை பேசும் நிகழ்ச்சிக்கு பின் அந்த கதாபாத்திரம் என்ன செய்யும் என்பது வாசகனின் கற்பனையில் நிகழ்கிறது. அதனால்தான் சிறுகதைகளுக்கு இடையே இடைவேளை தேவை படுகிறது.
swami and friends மட்டுமே படித்திருந்ததால் R.K Narayan ஒரு நகைச்சுவை எழுத்தாளராகவே தெரிந்தார். அது எவ்வளவு தவறு என்பது இந்த வாசிப்புக்கு பின்தான் புரிந்தது. ஒருசிறுகதையில், நாய் ஒன்று பிச்சைகாரனிடம் இருக்கும். அதை அவன் அடிமை போல் நடத்துவான். சிலர் அந்த நாயை விடுவிப்பார்கள் , ஆனால் சில நாட்களில் அந்த நாய் மீண்டும் அவனிடமே அடிமையாகி விடும். இந்த கதை எனக்கு எதோ நாயை பற்றி மட்டும் சொல்வதாக படவில்லை. வாழ்க்கையில் மாற்றங்களுக்கு மருகும் மனிதர்கள், பிரச்சனைகளை சமயோதிகமாக சமாளிப்பவர்கள், கடந்த காலங்களிலே வாழ்பவார்கள், என எல்லா மனிதர்களையும் காணமுடிகிறது.
கற்பனைதிறன் நிறைந்த அதே சமயம் உலகியலை உற்று கவனிப்பவரின் படைப்பு.
2 comments:
Ur hibernation period has ended in short span or just had a small break...
I feel it all depends on ur interest in reading books.It doesnt matter whether its short story or Novel.
Many people will prefer short stories eventhough it ends abruptly.In Novels,u hav to read many chapters together or hav to read many volumes to know the end.Exceptions like Harry Potter series now,will make readers enthusiastic and excited to know the last part.
pls visit
http://kaalapayani.blogspot.com/2007/05/blog-post_20.html
Post a Comment