நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன். இடமாற்றம் இடைவெளி ஏற்படுத்தும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு நீண்ட இடைவெளி எதிர்பாராதது. என்ன காரணம் என எழுதலாமா? எனக் கூட யோசித்தேன். எல்லா காரணமும் சிறிய கேள்விக்கு உட்படுத்தின்னாலே அபத்தமாக தோன்றியது. வாழ்க்கை என்பதே எல்லா திட்டமிடல்களையும், எதிர்பார்ப்புகளையும் தூக்கி எறிந்து எக்காளமிடும் அபத்தங்களின் கலவையாக தெரிகிறது. மிகவும் யோசித்து நகர்த்த படும் காய்களை விட, எதோ நிகழ்தகவுக்கு உட்பட்டு கட்டையில் விழும் எண்களே பெரும்பாலான ஆட்டங்களின் முடிவுகளை தீர்மானிக்கறது, ஆனாலும் தாயக்கரம் தொடர்ந்து விளையாடபடுவதர்க்கு காரணம் இந்த 'திட்டமிடல்களே'. இப்படி பட்ட அபத்தங்களுக்கும் , கணிப்புகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பரமபதம் தான் 'பீமா'.
கடைசி வரி படித்து விட்டு புருவம் உயர்த்துபவர்களுக்கு சில disclaimers:
பீமா - பல குறைகள் கொண்ட, தன்னை எந்த வரிசைக்குள் நுழைப்பது என்ற கேள்விக்கு விடை தெரியமால் தடுமாறி, 2.30மணி நேர நிரப்பல், குத்து பாட்டு போன்றவற்றின் முறையற்ற மசாலா கலவை. படதின் ஆரம்பத்தில் இந்த ஓட்டைகள் பிரம்மாண்டமாகவே தெரிகிறது. எழுந்து போய் விடலாமா எனக் கூட யோசித்தேன். ஆனால் இடைவெளியின் போது படம் கிட்டதட்ட ஒரு கோட்டுக்கு வந்திருந்தது. இது வரை நான் தமிழில் இது போன்ற முழு நீழ action படம் பார்க்கவில்லை என்றே தோன்றியது. விக்ரமின் சிறந்த body languageயும் நல்ல தொழில்நுட்பமும் நிறைந்த சண்டை காட்சிகளை காட்ட உதவவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் உருவாக்கப் பட்ட திரைக்கதையாக தெரிந்தது.
ஆனால் ஒட்டுமொத்தமாக , சில அழகிய காட்சிகளும், கொஞ்சம் subtleties யும் கொண்ட வரவேற்கதக்க படமாய் தெரிவதற்கு முக்கிய காரணம் படதின் பின்பகுதி. காதல் வயபடுகின்ற நொடியில் நிகழும் கவன சிதறல்களின் பக்க விளைவுகள் காட்ட பட்ட விதமும், விக்ரம் பிரிந்து செல்கின்ற தருணத்தில் பிரகாஷ் ராஜ் தன் மனைவியிடம் சொல்கிற வசனமும் படத்தின் ரசிக்கதக்க தருணங்களில் சில.
படம் பார்த்து ஒரு நாள் கழித்தும் என்னுள் இருக்கும் ஒரு மிக பெரிய கேள்வி: படத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருந்தால் எந்த அளவுக்கு இந்த படத்தை ரசித்து இருப்பேன்? படத்தின் குறைகள் தாண்டியும் என்னை படம் ஈர்த்ததுக்கு காரணம் துன்ப இயல்கள் மேல் எனக்கு இருக்கும் ஒரு 'romantic attachmentஆ?' இல்லை என்றே தோன்றுகிறது. காரணம்: முடிவு படதிற்கு ஒரு முற்றுத் தன்மையை தருகிறது. கடைசி பாடலுக்கும் முன் படம் முடிவதற்கு வாய்ப்பு இருக்கிறது(வியாபர கட்டாயங்களுக்கு படம் விரைவில் திருத்தப்பட்டால் ஆச்சரியம் இல்லை). ஆனால் பல விடையற்ற கேள்விகளுடன் படம் முடிந்திருக்கும். அதைவிட முக்கியம், படதின் இறுதி காட்சி 'வாழ்க்கை' எல்லா திட்டமிடல்களையும் மிதித்து செல்லும் அபத்தங்களின் juggernaut என்பதை கோடிடுகிறது.
P.S: விக்ரமின் நடிப்பு மிகவும் பிரமாதம். மிகவும் தொய்வான முற்பகுதியை அதுதான் தாங்கி நிற்கிறது.
1 comment:
Good that u started again after a very looooonnngg break...hope next one is not going to have a long break...
Post a Comment