நடக்க விடாமல்
கால்களை அமுக்கி,
சில சமயம் வீடு வரையே
ஒட்டிக்கொண்டு வந்து விடுகின்றன,
என்றோ,
கண்களை துருத்தி,
கடைசி துளியோடு,
கழண்டு விழுந்து-மணலாக
மாறி போன பிரியம்.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Tuesday, June 23, 2009
என்றோ எழுதியவை-3
பாலையின் வெட்கை
இரவின் மடியில்,
என் இருப்பை
வினவி பொகின்றன
உன் இல்லாமை.
காதோர கடிகள்
தலை சிலிர்க்கையில்,
காற்றோடு கரைகிறது-
நள்ளிரவு கனவாய்.
வேண்டாத போது -வரும்
மரணத்தை விட கொடியது
வேண்டிய போது
வாராத மரணம்.
என்றோ எழுதியவை-2
சீட்டாட்டம்
ஒவ்வொரு சுற்றிலும்
வெவ்வேறு விரலில்,
வெவ்வேறு சீட்டுகளுடன் - சேர்வது
குலுக்கி போடப்பட்ட சீட்டுகள் மட்டுமல்ல...
கழித்துக் கட்டபடுவதும்,
முக்கிய புள்ளியாய் முளைப்பதும்,
பதுக்கபடுவதும்,
சீண்ட படாமலே போவதும்
சீட்டுகள் மட்டுமல்ல....
ஒட்டி நின்ற சீட்டுகள்
வேறு விரலுக்கு சென்றவுடன்
வெட்டபடுவதும் சீட்டாடத்திற்கு மட்டுமே
உரித்தானதல்ல...
ஆனால்,
அடுத்த ஆட்டம் அறிந்து கொள்வதும்,
ஆட தெரிந்தவனிடம் தஞ்சமடைவதும்
சீட்டுக்கு மட்டும் சாத்தியமில்லை.
என்றோ எழுதியவை-1
1. துளிர் தேடும் அவசரத்தில்
கிழியும் காற்றானாது
வீழும் இலையின் மரணம்.
-------------------------------------------------------------
2. விலகும் தறிகள்
இணைத்து போகின்றன
இழைகளை.
------------------------------------------------------------
3. கிணற்றிலேயே வாழ்ந்து விட
முடியுமென்றால்- வேறென்ன கவலை
கிணற்று தவளைக்கு?
கிழியும் காற்றானாது
வீழும் இலையின் மரணம்.
-------------------------------------------------------------
2. விலகும் தறிகள்
இணைத்து போகின்றன
இழைகளை.
------------------------------------------------------------
3. கிணற்றிலேயே வாழ்ந்து விட
முடியுமென்றால்- வேறென்ன கவலை
கிணற்று தவளைக்கு?
Sunday, April 12, 2009
Saturday, March 7, 2009
விலாசமில்லாத மடல்
வார்த்தை கடலில் ,
நமக்கான உறவை சொல்லும் வார்த்தை,
சிப்பிக்குள் முத்தாய், எங்கோ...
நான் வருண பகவானல்ல...
ஆனால் பாசியில் இருந்து முத்துக்களை
பிரிக்க தெரிந்தவன்.........
உன்னை நான் அறிமுகபடுத்துவதற்கான வார்த்தை
என்றேனும் சரியான சிப்பியில் விழும்...
என்றேனும் என் கரை தொடும்....
ஆனால்,
அன்று என் அருகில் இருப்பாயா நீ?
இல்லை நம் உறவு
இறந்த காலம் ஆகி இருக்குமோ?
(பி.கு). உனக்கு தெரியும் இது உனக்கு தானென்று..
நமக்கான உறவை சொல்லும் வார்த்தை,
சிப்பிக்குள் முத்தாய், எங்கோ...
நான் வருண பகவானல்ல...
ஆனால் பாசியில் இருந்து முத்துக்களை
பிரிக்க தெரிந்தவன்.........
உன்னை நான் அறிமுகபடுத்துவதற்கான வார்த்தை
என்றேனும் சரியான சிப்பியில் விழும்...
என்றேனும் என் கரை தொடும்....
ஆனால்,
அன்று என் அருகில் இருப்பாயா நீ?
இல்லை நம் உறவு
இறந்த காலம் ஆகி இருக்குமோ?
(பி.கு). உனக்கு தெரியும் இது உனக்கு தானென்று..
Saturday, February 7, 2009
Sunday, January 18, 2009
Tuesday, December 30, 2008
தப்பித்தல்
சிறை பட்டு,
தரை பார்த்து,
உறை பனியாய் கிடக்கும் நாட்களில்
கரைந்து போகாமல்,
கரை கடப்பது எப்போது?
தரை பார்த்து,
உறை பனியாய் கிடக்கும் நாட்களில்
கரைந்து போகாமல்,
கரை கடப்பது எப்போது?
Sunday, October 5, 2008
மீண்டும்
சொன்னதையே சொல்லி, பேசியதியே பேசி,
நேரத்தை நீட்டி, காலத்தை கரைத்து,
கடல் தாண்ட முடியாது -என தெரிந்தாலும்,
கரை கலக்கும் முயற்சியிலே வாழ்க்கையை கானும் அலையாய் -
கண் மூடி,
உலகம் உறங்குவதாய் நினைத்துகொள்வது கூட சுகம் தான்.
உடைந்த கண்ணாடியில்,
பெருகும் பிம்பமாய் என்னுள் நீ.
p.s:
நீண்ட காலமாய், தமிழில் எதுவும் எழுதவில்லை. எதவாது எழுதியே தீரவேண்டும் என் முடிவு செய்த பொழுது, ஒரு காதல் கவிதை எழுத முடிவு செய்த காரணம், சுலபமாக செய்யக்கூடியது அதுவாக மட்டுமே பட்டது.
நேரத்தை நீட்டி, காலத்தை கரைத்து,
கடல் தாண்ட முடியாது -என தெரிந்தாலும்,
கரை கலக்கும் முயற்சியிலே வாழ்க்கையை கானும் அலையாய் -
கண் மூடி,
உலகம் உறங்குவதாய் நினைத்துகொள்வது கூட சுகம் தான்.
உடைந்த கண்ணாடியில்,
பெருகும் பிம்பமாய் என்னுள் நீ.
p.s:
நீண்ட காலமாய், தமிழில் எதுவும் எழுதவில்லை. எதவாது எழுதியே தீரவேண்டும் என் முடிவு செய்த பொழுது, ஒரு காதல் கவிதை எழுத முடிவு செய்த காரணம், சுலபமாக செய்யக்கூடியது அதுவாக மட்டுமே பட்டது.
Friday, June 6, 2008
Thats it
I was playing,
throwing the dice,
Counting the numbers,
moving the coin ,
smiling on hitting the ladder and
crying when stung by snake.
I smile for stings on knowing
neither can I chose the number nor quit the game :)
throwing the dice,
Counting the numbers,
moving the coin ,
smiling on hitting the ladder and
crying when stung by snake.
I smile for stings on knowing
neither can I chose the number nor quit the game :)
Wednesday, April 16, 2008
வாழ்வியல்கள்-2
மறைத்து,
மரத்து,
மறந்தே போகின்றன,
வாழ்தலுக்கான காரணங்கள்...
பிறத்தலுக்கும் இறத்தலுக்குமான
இடைவெளியை இருத்தலில்.
மரத்து,
மறந்தே போகின்றன,
வாழ்தலுக்கான காரணங்கள்...
பிறத்தலுக்கும் இறத்தலுக்குமான
இடைவெளியை இருத்தலில்.
Monday, April 14, 2008
வாழ்வியல்கள்-1
எதோ ஒரு புள்ளியில் இணைத்துவிடலாம் என்று
இழுக்கபடுகின்றன எல்லா சக்கரங்களும்....
தண்டவாளங்கள் இணைவதாய் தெரிவது
காட்சிபிழை என்பது புரியும்வரை...
இழுக்கபடுகின்றன எல்லா சக்கரங்களும்....
தண்டவாளங்கள் இணைவதாய் தெரிவது
காட்சிபிழை என்பது புரியும்வரை...
Friday, April 11, 2008
Monday, September 3, 2007
சுயம்
பையன்,
தம்பி,
அண்ணன்,
மாமன்,
தோழன்,
சகபணியாளன்,
அறைவாசி,
அரைவாசி- என
எல்லோரிடமும் இருக்கிறது,
எனக்கான பெயர். இன்னும்
எனக்கு மட்டும் கிடைக்கவில்லை,
எனக்கான என் பெயர்.
தம்பி,
அண்ணன்,
மாமன்,
தோழன்,
சகபணியாளன்,
அறைவாசி,
அரைவாசி- என
எல்லோரிடமும் இருக்கிறது,
எனக்கான பெயர். இன்னும்
எனக்கு மட்டும் கிடைக்கவில்லை,
எனக்கான என் பெயர்.
Sunday, June 24, 2007
Friday, June 22, 2007
Tuesday, May 29, 2007
சொற்களைத் தாண்டி
எழுதி முடித்து பார்த்தால்,
சில சொற்கள் ஒதுங்கி நின்றன கவிதையில்..
எதிரில் வரிசையற்ற பற்கள் கொண்டவர்,
ஏதோ அழகாய் சொல்லி கொண்டிருந்தார்,
துருத்திய சொற்களை திருத்தாமலே
விட்டுவிட்டேன்.
சில சொற்கள் ஒதுங்கி நின்றன கவிதையில்..
எதிரில் வரிசையற்ற பற்கள் கொண்டவர்,
ஏதோ அழகாய் சொல்லி கொண்டிருந்தார்,
துருத்திய சொற்களை திருத்தாமலே
விட்டுவிட்டேன்.
Monday, December 18, 2006
பனி.....பணி
Heater சத்ததில் விடியும் காலை,
பனி பெய்யும் வேளை,
மனிதரே நடவா சாலை,
பளிங்கு போல் மின்னும் நேற்றைய புல்வெளி,
அனைத்தும் அர்த்தமிழக்கிறது,
கணிணி திரையை உயிர்பிக்கும் நொடியில்.
பனி பெய்யும் வேளை,
மனிதரே நடவா சாலை,
பளிங்கு போல் மின்னும் நேற்றைய புல்வெளி,
அனைத்தும் அர்த்தமிழக்கிறது,
கணிணி திரையை உயிர்பிக்கும் நொடியில்.
Sunday, December 17, 2006
கரையும் காலம்
வாரமொன்று கழிந்தால்
வருடமொன்று கழிய,
விசனங்கள் இல்லாமல்
விசயங்களோடு மட்டுமே கழிந்த நேரங்கள்,
கண் முடி அளவே......
தலை குனிந்து கை குவித்து
நான் பருக முயல,
விரலிடுக்கில் வழியும் நீராய்,
காலம் கரைய,
குடுவையின் மீதம் தெரியாமல்,,
நான் குழம்ப,
நீர் வழிந்து கொண்டே இருக்கிறது...
குடுவையின் மிச்சம் பார்க்க,
அடுத்தவன் சிந்தியதை பார்க்க,
பார்வையாளர்களுக்கு முகம் மாற்ற -என
தவற விட்ட துளிகளை துடைத்து விட்டால்,
நான் விழுங்கியதில் அதிகம் என் எச்சில்களே!
என்றோ விழுங்கிய நீர்தானே இன்றய எச்சில்..
வரும் நீர் மட்டுமே கிளியின் கன்னாய் தெரிய,
நான் ஒன்றும் பார்த்திபன் அல்லவே!!!
வழிந்த நீருக்காய் கரு வளைங்கள் பெருக்காமல்,
வாழ வாய்பதில்லை எல்லோருக்கும்......
வருடமொன்று கழிய,
விசனங்கள் இல்லாமல்
விசயங்களோடு மட்டுமே கழிந்த நேரங்கள்,
கண் முடி அளவே......
தலை குனிந்து கை குவித்து
நான் பருக முயல,
விரலிடுக்கில் வழியும் நீராய்,
காலம் கரைய,
குடுவையின் மீதம் தெரியாமல்,,
நான் குழம்ப,
நீர் வழிந்து கொண்டே இருக்கிறது...
குடுவையின் மிச்சம் பார்க்க,
அடுத்தவன் சிந்தியதை பார்க்க,
பார்வையாளர்களுக்கு முகம் மாற்ற -என
தவற விட்ட துளிகளை துடைத்து விட்டால்,
நான் விழுங்கியதில் அதிகம் என் எச்சில்களே!
என்றோ விழுங்கிய நீர்தானே இன்றய எச்சில்..
வரும் நீர் மட்டுமே கிளியின் கன்னாய் தெரிய,
நான் ஒன்றும் பார்த்திபன் அல்லவே!!!
வழிந்த நீருக்காய் கரு வளைங்கள் பெருக்காமல்,
வாழ வாய்பதில்லை எல்லோருக்கும்......
Subscribe to:
Posts (Atom)