Sunday, May 17, 2009

தேர்தல் முடிவுகள்2009

பாராளுமண்ற தேர்தல் முடிவுகள், பெரும்பலோருக்கு ஆச்சர்யத்தை ஏற்படித்தியிருக்கிறது. அதிமுக கூட்டணியின் தோல்விக்கான காரணங்கள் என இப்பொழுது சொல்லபடுபவை எல்லாம் யூகங்களே. அவை நிருப்பிக்க முடியதவை. ஆனால் ஏன் பெரும்பாலனோர் எதிர்பார்ப்பு பொய்த்தது என அனுமானிக்கலாம்.

  1. தேமுதிகா வின் ஒட்டு பிரிப்பு திமுகாவிற்கு சாதகம் என தேர்தல் முன்பு இருந்து பலர் சொல்லி வருகிரார்கள், ஆனால் என்னால் அதை முழுமையாக ஏற்க முடியவில்லை. காரணம்- தேமுதிகா ஆட்சியில் இருப்பவருக்கு எதிரான ஓட்டுக்களையே பிரிக்கிறது என்றால், ஏன் சென்ற சட்டசபை தேர்தலில் அது அதிமுகவிற்கு உதவவில்லை?

  2. பணம் பாய்ந்திருக்கிறது -உண்மை. அதிமுக ஒன்றும் பண பற்றாக்குறையான கட்சி இல்லையே? இவர்கள் எல்லோரை விட பணம் குறைவாக உள்ள தேமுதிக நல்ல ஓட்டு விகிதம் பெற்று இருக்கிறதே?

  3. இலங்கை தமிழர் பிரச்சினை: இதை மட்டுமே பிரதானமாக நம்பி எதிர்கட்சிகள் பிரச்சாரம் பண்ணினார்கள். ஆனால் அது ஏன் தேர்தல் அலையாக மாறவில்லை? ஒரு பிரச்சனை தேர்தல் அலையாக மாறும் போது அது பல தர்க்க நியாங்களை இழந்து, வெரும் உணர்வு பூர்வமாக மட்டும் பார்க்க படும். உதாரணம்: ராஜிவ் படுகொலைக்கு பின் தேர்தல், ஜெயலலிதா நடத்திய ஆடம்பர திருமணத்திற்கு பின் வந்த தேர்தல். தேர்தல் அலை எப்பொழுதும் ஒரு பொதுபடுத்தபட்ட குற்றவாளியையும், அதற்கு எதிரான வரையும் அடையாளம் கண்டிருக்கும்.ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. எல்லா கட்சிகளும் தேர்தல் நேர பிரச்சினையாக மட்டுமே இலங்கை பிரச்சினயை அனுகியது மக்களுக்கு பிடிக்காமல் போகியிருக்கலாம். அந்த பிரச்சனையின் நீண்ட நெடும் காலம், அதன் மேலான ஈர்ப்பை குறைத்திருக்கலாம். மிக முக்கியமாக, இலங்கை பிரச்சனை ltte மற்றும் இலங்கை அரசுக்கும் ஆன போராக மட்டுமே பெரும்பாலான் ஊடகங்களால் நிறுவ பட்டுவிட்டது. அது ஒரு மனிதநேய பிரச்சினையாக பார்க்க படவில்லை. அப்படி பார்க்க பட்ட ஒரு சில பார்வகளும் LTTE ஆதரவு என்றே முத்திரை குத்தபட்டது. In war ther is no neutral, either you or with us or against us- என்ற கால காலமாக ஏற்கவைக்கபட்ட வாதம், பிரச்சனையின் மையபுள்ளியை நகர்த்திவிட்டது. ஊடகங்களின் மூலமாக தன் எண்ணங்களை தீர்மானிக்கபடும் (வருத்தபட வேனடியது தான் என்றாலும், இதுதான் நிதர்சன்ம்), வாக்களர்கள், தீவரவாத எதிர்ப்பு, மரண ஒலம் இரண்டுக்கு நடுவே குழம்பி போகி , ஒரு தனிப்பட்ட எதிரியயை அடையாளம் காண முடியவில்லை. மக்களின் வாழ்வாதர பிரச்சினைகளை பற்றி பேசாமல் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையை முன் வைத்து வெற்றி பெற்று விடலாம் என சுலபமான பதயை தேர்ந்தெடுத்துவிட்டார் ஜெ.மின் பாற்றாக்குறையால் அதிகம் பாதிக்கபட்ட கொங்கு பகுதியில் திமுகாவால் வெல்ல முடியவில்லை. என் தனிபட்ட உணர்வு, விஜயகாந்த், மக்கள் பிரச்சினைகளோடு தன்னை இணைத்த அளவுக்கு கூட ஜெ இணயவில்லை.

  4. திமுக எப்பொழுதும் தனெக்கெதிராய் ஒரு எதிரி இருப்பதையே விரும்பி இருக்கிறது. தன் வெற்றியைவிட மதிமுக, பாமக, போன்ற கட்சிகளின் வளர்ச்சியை மட்டு படுத்துவதில் அதன் கவனத்தை பல முறை செயல் படுத்தி இருக்கிறது. இது கருணாநிதியின் மிக பெரிய ராஜதந்திரம். முன் எப்பொழுதும் இல்லாத வகையில் , இந்த முறை, அது பெரிய அளவில் வெற்றி பெற்றிருகிறது. ஆனால், காலம் வெற்றிடங்களை விரும்புவது இல்லை. விஜயகாந்தின் ஓட்டு அதைதான் நிருபிக்கிறது. இன்னும் எத்தனை காலம் தனியாய் தாக்கு பிடிப்பார் என காத்திருக்கிறது திமுக/அதிமுக. வலைக்குள் விழுமா, அல்லது அதற்குள் எங்கேனும் வெல்லுமா என்பதை காலமே சொல்லும். அரசியலும் , சினிமா போலத்தான், பலமுறை, வெற்றியை தீர்மானிப்பவை, நிகழ்தகவுகளே. ஆனால் , தன் இருப்பிடத்தை தக்க வைக்க வெற்றிகள் அவசியம். அது சினிமாவில் ரஜினியாக இருந்தாலும் சரி, அரசியலில் விஜயகாந்தாக இருந்தாலும் சரி. அடுத்த தேர்தல், எல்லோரைவிட விஜ்யகாந்துக்கு பெரிய சவால்.

No comments: