Tuesday, June 29, 2010

சிங்கம்

எவ்வளவு மொக்கை படமாய் இருந்தாலும் விடாமல் பார்பவன்தான் நான். பள்ளி நாட்கள், cable ஆரம்ப காலம், Raj digital channel சனி ஞாயிறு நாட்கள் காலை 4 படங்கள் போடுவார்கள். Censor board அதிகாரிகள் மட்டுமே பார்த்திருக்க கூடிய படங்கள் அவை. அவர்கள் கூட முழுசாய் பார்த்திருப்பார்களா தெரியவில்லை. அப்படி பார்த்திருந்தால் ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றும் அவர்கள் கடமை உணர்ச்சியை என்ன சொல்வது. அவற்றையும் கூட விடாமல், ஒன்று அல்ல 4 படங்கள் தொடர்ந்து பார்த்த 'ரொம்ப நல்லவனான' நான் பயப்படும் சில பெயர்கள் உண்டு. அவை பேரரசு, விஜய், Sun pictures. இந்த 3 பேருக்கும் இடையே நிறைய தொடர்பு உண்டு. பேரரசு விஜய்யை வைத்து படம் எடுத்தார். அப்பறம் விஜய் படத்தை பரத், அஜித் இப்படி எல்லோரையும் வைத்து எடுத்தார். Sun pictures ரெண்டு விஜய் படம் எடுத்தாங்க, இப்ப ஒரு வித்தியாசத்துக்கு சூர்யாவை வைத்து ஒரு விஜய் படம் எடுத்திருக்காங்க.. Trailer பார்க்கும் போதே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. வாழ்க்கையில் சில சமயம் மூளையின் எல்லா neuron சொல்லும் செய்யாதேன்னு, இருந்தும் செஞ்சுட்டு திருதிருன்னு முழிப்போம் (அவனவனுக்கு அவன் கல்யாணம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை), அப்படி ஒரு முடிவுதான் நான் சிங்கம் பார்த்தது.

எதாவது வித்தியாசமாய் செய்யனுமினு room போட்டு யோசிச்ச ஹரி, heroவிற்கு intro தர மாதிரி இந்த தடவை வில்லனுக்கு தந்திருக்கார். ரொம்ப புத்திசாலி வில்லந்தான் ஆனால், ஹீரோவோட மோத ஆரம்பிச்சவுடன், காசு குடுத்து படம் பார்க்க வந்தவனை விட, முட்டாளாகிவிடுகிறார். அந்த கால பீர்பால் கதையை , இன்றைய ஆதித்யா tv பார்த்து வளரும் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே கதையில் நுழைச்சிருக்காரு டைரக்டரு. சூர்யா சண்டை போடுகிறார்; ஊர் பிரச்சனையை தீர்கிறார், சின்ன ஊர் என்பதால் பிரச்சனைகள் அதிகம் இல்லை, எனவே சிங்கத்தின் மதியூகத்தை மீண்டும் மீண்டும் நாம் அறிய , heroine வாய்ப்புக்கள் உருவாக்குகிறார். invariably ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பாட்டோடு முடிகிறது. இதற்கெல்லாம் நடுவில் விவேக் மனம் தளராமல் நெடுநேரம் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். நம் மக்கள் அதை மதிக்காமல் சீட்டைவிட்டு எழுந்து போகிறார்கள் அல்லது திருட்டு DVDயா இருந்தால் forward செய்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் வில்லனும் தூத்துகுடியில் இருக்கும் ஹீரோவும் எப்படி சந்திப்பார்கள் என நாம் குழம்பி கொண்டிருக்க, “கேக்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியும்” ங்கிற message பார்வையாளர்களுக்கு சென்று அடையனுமுனு ரொம்ப யோசிச்சு , சென்னையில் இருக்கிற ஜட்ஜ், யாருக்கும் எங்க இருக்குனு கூட தெரியாத கிராமத்து police stationயில் ரிமாண்ட் கையெழுத்து போடனும் என்ற order போடுகிறார். அந்த ஜட்ஜுக்கு அந்த ஊர் பேர் எப்படி தெரிஞ்சுதுன்னு தெரியல்லை.

அதுக்கப்பறமென்ன வில்லனும் ஹீரொவும் ஆடுற ஆடு புலி ஆட்டந்தான் மீதி படம். சிங்கத்துக்கு சென்னைக்கு promotion கிடைக்குது. வந்து பார்த்தால் promotion வாங்கி குடுத்ததே நம்ம வில்லந்தான். அட என்ன twist அப்படின்னு என் கூட படம் பார்கிறவன் கிட்ட சொன்னா, இது தெரிஞ்சதுதானே அப்படினான். அது சரி அவன் மீட்க முடியாத இருளில் இருக்கான் அப்படின்னு முடிவு செய்து, தனி ஆளாகவே படத்தை ரசிக்கற முயற்சியில் இறங்கிவிட்டேன்.

விவேக்கால் தர முடியாத காமெடியை ரெண்டே scene வர விஜயகுமார் தருகிறார். சிங்கத்தை Assistant Commisioner ஆக்குவதாகட்டும், இறுதியில் சிங்கம் part 2 வரும் என சொல்வதாகட்டும், என்ன காமெடி.!!!

சுஜாதா, “திரைக்கதை எழுதுவது எப்படி" என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். எனக்கு தெரிந்து அதெல்லாம் வேஸ்ட். . சிங்கம் படத்தை எடுத்து அதில் இருக்கிற சில sequence மட்டும் மாற்றுவதற்கு கொஞ்ச நேரம் யோசித்தால் போதும், பலான ,sorry பல படம் பண்ணலாம்.

Sunday, June 6, 2010

மென்முள்

நெடுங்காலமாக வாசிக்க நினைத்து, நேற்று வாசித்து முடித்த புத்தகம்-மோகமுள். தி.ஜா என்றவுடன் பலரும் சொல்லுவது மோகமுள். ஆனால் நான் 'அம்மா வந்தாள்', 'தி.ஜா சிறுகதைகள்', 'நடந்தாய் வாழி காவேரி', பிறகுதான் மோகமுள் வந்தடைந்தேன். மோகமுள், பல கிளை கதைகள், நிறைய கதாபாத்திரங்கள், பல்வேறுபட்ட கதை நிகழ்விடங்கள் என எந்த சிறந்த படைப்பாளியின் 'magnum opus'யிலிருக்கும் அனைத்து விசயங்களும் கொண்ட படைப்பு. எந்த ஒரு படைப்பாளியின் நெடுங்கனவு.

திஜாவின் எழுத்தில் ஒருவித எளிமை இருக்கும் . எதோ சாதரணமாய் செய்து விட்ட மாதிரி இருக்கும். அதை நாம் திருப்பி சொல்ல முயற்சிக்கும் போதுதன் தெரியும், அதிலுள்ள சிக்கல்கள். திஜா வின் முத்திரை, புத்தகத்தின் பல இடங்களில் காண முடிகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் இருக்கின்றதா என்றால் இல்லை. இது என் தனிப்பட்ட பிரச்சினையாக கூட இருக்கலாம். ஒரு ராகத்தை எடுத்து ஒரு மணி நேரம் அதில் உள்ள நுணுக்கங்களை காட்டுகிற திறமையுடைய பாடகர் ஒருவரின், '2 மணி நேரத்தில் 6 பாட்டு' கச்சேரி கேட்பது போல் உள்ளது. திஜாவின் மிக சிறந்த வித்தைகளை படித்து விட்டு 'மோகமுள் ளில்' கிடைப்பது, an average experience for thi.ja standard.

மோகமுள் திரைப்படமாக எடுத்து கொண்டு இருந்த நேரமது, தினமணி கதிரில் வந்த கட்டுரையில், இருவர் மோகமுள் வாசித்து விட்டு அதே நினைப்புடன் கும்பகோணம் சென்று ஏமாந்து வந்ததாய் ஒரு செய்தி இருக்கும். உண்மையில் ஒரு இடத்தை விவரிக்கும் போது நம்மை அங்கு கொண்டு போய் அமர்த்திவிடுகிறார். இக்கதை அரை நூற்றாண்டுக்கு முந்தயைது, என்பது மறந்து போய், அந்த தெருக்களில் நாமும் உலாவுகிறோம். அவற்றின் அழகில் மயங்கி அதை காண விழையும் நொடியில்தான் புத்திக்கு எட்டுகிறது, இது கதையென்பது. இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்துவதில் திஜாவைவிட சிறந்தவரை நான் இன்னும் வாசிக்கவில்லை.

நிகழ்வுகளை, எண்ண ஓட்டங்களை விவரிக்கும் போது இரண்டிரண்டு படிகளாய் துள்ளும் நடை வாசிப்பாளனிடம் ஒரு வித புத்திசாலிதனத்தை எதிர்பார்கிறது. இந்த jump திஜாவின் மற்ற படைப்புகளை விட இதில் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலும் கதை அதிகம் அலட்டிகொள்ளாது நிதானமாய் செல்லும் இரயில் போலவே செல்லுகிறது. ஆனால் முடிவில் எதோ துரித கதியில் எல்லோருடைய ஒப்புதலையும் பெற்று கதை முடியும் போது, இத்தகைய நாவலுக்குரிய முடிவாய் இல்லாமல் எதோ பின் குறிப்பு படிப்பது போல் உள்ளது.

திஜாவின் படைப்புலகில் சிக்கல்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்கள் உளசிக்கல்களேயன்றி, பிற மனிதர்களாலோ, நிகழ்வுகளாலோ வருவது அல்ல. வளைவுகளோ, திருப்பங்களோ இல்லாத , இரு பக்கங்களும் பசுமை எழில் நிறைந்த சாலையில் நடப்பது போன்ற ரம்மியமான அனுபவம். பிரச்சினை கதை இப்படியே 700 பக்கங்களுக்கு செல்லும் போது ஒரு வித தொய்வு ஏற்படுகிறது. இதனால்தான் என்னவோ எனக்கு இன்றும் , நான் பள்ளியில் படித்த சிறுகதை (கருணையே உருவான ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை தண்டித்துவிடுதல் பற்றிய கதையது) ஏற்படுத்திய தாக்கத்தை மற்றவை ஏற்படுத்துவதில்லை.