Tuesday, June 29, 2010

சிங்கம்

எவ்வளவு மொக்கை படமாய் இருந்தாலும் விடாமல் பார்பவன்தான் நான். பள்ளி நாட்கள், cable ஆரம்ப காலம், Raj digital channel சனி ஞாயிறு நாட்கள் காலை 4 படங்கள் போடுவார்கள். Censor board அதிகாரிகள் மட்டுமே பார்த்திருக்க கூடிய படங்கள் அவை. அவர்கள் கூட முழுசாய் பார்த்திருப்பார்களா தெரியவில்லை. அப்படி பார்த்திருந்தால் ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றும் அவர்கள் கடமை உணர்ச்சியை என்ன சொல்வது. அவற்றையும் கூட விடாமல், ஒன்று அல்ல 4 படங்கள் தொடர்ந்து பார்த்த 'ரொம்ப நல்லவனான' நான் பயப்படும் சில பெயர்கள் உண்டு. அவை பேரரசு, விஜய், Sun pictures. இந்த 3 பேருக்கும் இடையே நிறைய தொடர்பு உண்டு. பேரரசு விஜய்யை வைத்து படம் எடுத்தார். அப்பறம் விஜய் படத்தை பரத், அஜித் இப்படி எல்லோரையும் வைத்து எடுத்தார். Sun pictures ரெண்டு விஜய் படம் எடுத்தாங்க, இப்ப ஒரு வித்தியாசத்துக்கு சூர்யாவை வைத்து ஒரு விஜய் படம் எடுத்திருக்காங்க.. Trailer பார்க்கும் போதே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. வாழ்க்கையில் சில சமயம் மூளையின் எல்லா neuron சொல்லும் செய்யாதேன்னு, இருந்தும் செஞ்சுட்டு திருதிருன்னு முழிப்போம் (அவனவனுக்கு அவன் கல்யாணம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை), அப்படி ஒரு முடிவுதான் நான் சிங்கம் பார்த்தது.

எதாவது வித்தியாசமாய் செய்யனுமினு room போட்டு யோசிச்ச ஹரி, heroவிற்கு intro தர மாதிரி இந்த தடவை வில்லனுக்கு தந்திருக்கார். ரொம்ப புத்திசாலி வில்லந்தான் ஆனால், ஹீரோவோட மோத ஆரம்பிச்சவுடன், காசு குடுத்து படம் பார்க்க வந்தவனை விட, முட்டாளாகிவிடுகிறார். அந்த கால பீர்பால் கதையை , இன்றைய ஆதித்யா tv பார்த்து வளரும் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காவே கதையில் நுழைச்சிருக்காரு டைரக்டரு. சூர்யா சண்டை போடுகிறார்; ஊர் பிரச்சனையை தீர்கிறார், சின்ன ஊர் என்பதால் பிரச்சனைகள் அதிகம் இல்லை, எனவே சிங்கத்தின் மதியூகத்தை மீண்டும் மீண்டும் நாம் அறிய , heroine வாய்ப்புக்கள் உருவாக்குகிறார். invariably ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு பாட்டோடு முடிகிறது. இதற்கெல்லாம் நடுவில் விவேக் மனம் தளராமல் நெடுநேரம் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். நம் மக்கள் அதை மதிக்காமல் சீட்டைவிட்டு எழுந்து போகிறார்கள் அல்லது திருட்டு DVDயா இருந்தால் forward செய்கிறார்கள்.

சென்னையில் இருக்கும் வில்லனும் தூத்துகுடியில் இருக்கும் ஹீரோவும் எப்படி சந்திப்பார்கள் என நாம் குழம்பி கொண்டிருக்க, “கேக்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியும்” ங்கிற message பார்வையாளர்களுக்கு சென்று அடையனுமுனு ரொம்ப யோசிச்சு , சென்னையில் இருக்கிற ஜட்ஜ், யாருக்கும் எங்க இருக்குனு கூட தெரியாத கிராமத்து police stationயில் ரிமாண்ட் கையெழுத்து போடனும் என்ற order போடுகிறார். அந்த ஜட்ஜுக்கு அந்த ஊர் பேர் எப்படி தெரிஞ்சுதுன்னு தெரியல்லை.

அதுக்கப்பறமென்ன வில்லனும் ஹீரொவும் ஆடுற ஆடு புலி ஆட்டந்தான் மீதி படம். சிங்கத்துக்கு சென்னைக்கு promotion கிடைக்குது. வந்து பார்த்தால் promotion வாங்கி குடுத்ததே நம்ம வில்லந்தான். அட என்ன twist அப்படின்னு என் கூட படம் பார்கிறவன் கிட்ட சொன்னா, இது தெரிஞ்சதுதானே அப்படினான். அது சரி அவன் மீட்க முடியாத இருளில் இருக்கான் அப்படின்னு முடிவு செய்து, தனி ஆளாகவே படத்தை ரசிக்கற முயற்சியில் இறங்கிவிட்டேன்.

விவேக்கால் தர முடியாத காமெடியை ரெண்டே scene வர விஜயகுமார் தருகிறார். சிங்கத்தை Assistant Commisioner ஆக்குவதாகட்டும், இறுதியில் சிங்கம் part 2 வரும் என சொல்வதாகட்டும், என்ன காமெடி.!!!

சுஜாதா, “திரைக்கதை எழுதுவது எப்படி" என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். எனக்கு தெரிந்து அதெல்லாம் வேஸ்ட். . சிங்கம் படத்தை எடுத்து அதில் இருக்கிற சில sequence மட்டும் மாற்றுவதற்கு கொஞ்ச நேரம் யோசித்தால் போதும், பலான ,sorry பல படம் பண்ணலாம்.

1 comment:

sakthi said...

un 'feelings' enakku puriyuthu mappu...
yenna naanum singam parthen..