சில படங்கள் பார்க்கும் வரை நன்றாக இருக்கும். முடித்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மேலிருக்கும் பிரேமை குறையும். சிவாஜியும் அப்படித்தான். பார்க்கும் நேரத்தில் சிரித்து மகிழ்ந்தேன். style-இல் எனை மறந்தேன், பாடல்களின் பிரம்மாண்டத்தில் விழி விரித்தேன். ஆனால் படம் முடிந்து யோசித்தால் படம் வெரும் கேலிக்கூத்தாக தெரிந்தது. சங்கர் 'சந்திரசேகர் பட்டறையில் இருந்து வந்தவர். ரஜினி- அசாதாரணமான விசயங்களை மட்டுமே செய்ய வேண்டிய கட்டாயதில் இருப்பவர். நான் எதிர்பார்த்தது ஒரு குறைந்த பட்ச coherency. comedy, fight, style, நடுவில் எதோ கொஞ்சம் தொங்கி கொண்டிருக்கும் கதை என இருக்கிறது படம்.
தன் star imgae பற்றி எல்லாம் கவலை படாமல் comedy- இல் பின்னி இருக்கார் ரஜினி. "தம்பிக்கு எந்த ஊர்" ரஜினியை பார்த்த திருப்தி. அதேபோல் style-இல் பல ரஜினி படங்களுக்கு இது ஒன்று சமம். சங்கரின் பிரம்மாண்டம் ஒரு துளி கூட குறையவில்லை.
ஹவாலா மோசடிக்கு உடந்தையாக முஸ்லிம்களை, ஒரு பொழுதுபோக்கு படத்தில், காட்ட வேண்டியது, சில கேள்விகளை எழுப்புகிறது. அதே போலத்தான் கறுப்பு நிறம் சார்ந்த நகைச்சுவை காட்சிகளும்....
ஒரு இளைஞன் கனையாழி கடைசி பக்கதில்.. படத்தில் சம்பந்தமே இல்லாமல் வரும் காட்சிகளையும், அது சார்ந்த செலவுகளையும், ஒரு கெட்டவார்த்தை சேர்த்து "தடித்தனம்", எனச் சொன்னார். இந்த நிலைமையால் நான் 100 வருசதுக்கு சினிமா எடுக்க மாட்டேன் என்று கூடச் சொன்னார். வாழ்க்கை அவருக்கு தன் முதுமை காலத்தில் "சிவாஜி"க்கு வசனம் எழுத கற்று கொடுத்துள்ளது.....
சுஜாதா -உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது????
சிவாஜி பொழுது போக்காக இருக்கிறதா?-100% இருக்கிறது,
பார்க்கும் பொழுது ஒரு பார்வையாளனை தன் பிரச்சனைகளை மறந்து இருக்க செய்கிறதா-100%..
ரஜினி என்கிற மனிதனின் திறமைகளை பயன் படுத்தியுள்ளதா- 100%.
காலம் கடந்து சிவாஜி நிற்குமா? படம் பார்த்து முடித்து சில நாட்கள் கழித்து எதாவது ஒரு நொடியில் சிவாஜி நியாபகதிற்கு வருமா? ...எனக்கு 1% கூட நம்பிக்கை இல்லை.
4 comments:
entha oru visayamum athikamana muthalidudan seyum poluthu ,athai sarnthavan satre thadu maruvathu valakam...some compromises happens.
The same applies to sankar..
Sila padangal sinthika vaipaivai,sila namathu valigalai maranthu sirika vaipavai...
irandayum seri vara seivathu konjam kastam.
ivatrudan pota panathai edupathu..innum kadinam..
sankar sirikai vaithum,muthalidai thirumba peruvatharkana muyarchiyilum vetri adanthirukirar..
enudaya karuthil pilai irunthal thiruthavum...
hey...konjam english or thanglish la blog ezhudana nangalum padipomeee...!!
Ram:
I have no issues in making a masala movie and i enjoyed the comedy. But for a man who is reaching his end of film carrier this is not a good choice. This movie will generate all revenues but will it be remembered? Why did not shankar spend some his skills to come up with a movie like padayappa or baadsha?
But all kudos to shankar and his team for achieveing wht they aimed at..
Hi anonymous,
I am typing only in tanglish, but a tool in my laptop ensures it comes as it has to be :)
Thanks for your inputs.
Post a Comment