"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."
குறள் படித்த அனைவரும் கட்டாயம் கேள்வி பட்டிருக்க கூடிய குறள். நீண்ட காலத்திற்கு இக்குறள், கல்வியின் பயன் கடவுளை வணங்குவது எனும் பொருள் தருவதாகவே மட்டுமே தோன்றியது. பின் வாலறிவன் என்ற சொல் சமண சொல் என்ற வாதம் கேள்வி பட்டேன். கல்வியின் பயன் அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்றல் எனும் 'நாத்திக' கருத்து அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாய், வாலறிவன் = அனைத்தும் அறிந்தவன் எனும் அர்த்தம் வருமோ எனத் தோன்றியது. அப்படி சாத்தியப்பட்டால் , அனைத்தும் அறிந்தவர் பாதம் தொழாவிட்டால் கல்வியின் பயன் இல்லை என அர்த்தபடுகிறது. அனைத்தும் அறிந்தவர்(ன்) இருக்க முடியுமா ?( கடவுள்??). அல்லது ஒட்டுமொத்த அறிவுக்கு கொடுக்கபட்ட உருவம்தான் வாலறிவனோ?. பாதம் பனிதல் என்றால் அடக்குத்துடன் இருத்தல் எனக் கொள்ளலாம். அப்படி என்றால், "அறிவுலகின் முன் பணிவுடன் இருத்தல், அதாவது கற்றது கைமண் அளவு என்பதே கல்வியின் பயன்."
6 comments:
Sakthi..Good that i introduced to blogs..Glad to see your blog and u write well too..
Keep it up..
I guess u know who I am
thanks for your comments.i am not sure who r u. But only few people read my blog. if u wish u can disclose.
Are you doing some research in thirukkural.
I guess since you write abt thirukkural you should know a
little bit of Tamil grammar about porulkoal.
Why should the kural not(is not) interpreted as
Katradhanaal aaya payanen..Vaalarivan natraar kol thozhaar enin .
Just as a question and not as a statement?
Hi Anonymous,
1.As i stated in earlier post my exposure with kural is much limited and so i am not doing any resarch.
2. my tamil grammar stopped at school days and now i am trying to brush it up. well as far as porulkon none of those eight seems to fit the pattern you are trying to say. may be i am wrong.It will be more understandable if you can say the meaning that you are trying to drive by that re-arrangement.
அன்புள்ள சக்தி,
வாலறிவன் - கடவுள் என்று பொருள் ஏற்படுமானால் அதற்கு கற்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரு கேள்வி எழுகிறது?
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக"
என்ற குறளில் கற்பதன் பயன் புரிகிறது.
நீங்கள் கூறியவாறு அனைத்தும் அறிந்தவனாக எவனாலும் இவ்வுலகத்தில் இருக்க முடியுமானால் "கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" என்ற கூற்றுக்கு எதிர்மறையாகிவிடும்.
ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நான் அனைத்தும் அறிந்தவனாக ஒருவனால் இருக்க முடியும் என சொல்லவில்லை. மாறாக, அனைத்தும் அறிந்த (தனி மனிதன், கடவுள், அறிவுலகம்- அவரவர் பார்வைக்கு ஏற்ப இது மாறும்)முன் பனிதல். கற்பதின் பயன் கற்க வேண்டியது நிறைய என உணைர்தல்.
ஒருவேளை நான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கலாம்.
Post a Comment