வாரமொன்று கழிந்தால்
வருடமொன்று கழிய,
விசனங்கள் இல்லாமல்
விசயங்களோடு மட்டுமே கழிந்த நேரங்கள்,
கண் முடி அளவே......
தலை குனிந்து கை குவித்து
நான் பருக முயல,
விரலிடுக்கில் வழியும் நீராய்,
காலம் கரைய,
குடுவையின் மீதம் தெரியாமல்,,
நான் குழம்ப,
நீர் வழிந்து கொண்டே இருக்கிறது...
குடுவையின் மிச்சம் பார்க்க,
அடுத்தவன் சிந்தியதை பார்க்க,
பார்வையாளர்களுக்கு முகம் மாற்ற -என
தவற விட்ட துளிகளை துடைத்து விட்டால்,
நான் விழுங்கியதில் அதிகம் என் எச்சில்களே!
என்றோ விழுங்கிய நீர்தானே இன்றய எச்சில்..
வரும் நீர் மட்டுமே கிளியின் கன்னாய் தெரிய,
நான் ஒன்றும் பார்த்திபன் அல்லவே!!!
வழிந்த நீருக்காய் கரு வளைங்கள் பெருக்காமல்,
வாழ வாய்பதில்லை எல்லோருக்கும்......
No comments:
Post a Comment